வங்கதேசம் vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Nov 27 2023 20:16 IST
வங்கதேசம் vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. உலகக்கோப்பைக்கு முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

பின்னர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த தொடரை வெல்வதற்கு நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது.

அதே நேரத்தில் இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால் நியூசிலாந்து அணி வெற்றிக்காக போராடும். எனவே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs நியூசிலாந்து
  • இடம் - சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சில்ஹெட்
  • நேரம் - காலை 9 மணி (GMT 0330)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • நியூசிலாந்து - 13
  • வங்கதேசம் - 01
  • முடிவில்லை - 03

உத்தேச லெவன்

வங்கதேசம்: ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), மொமினுல் ஹக், மஹ்முதுல் ஹசன் ஜாய், முஷ்பிக்கூர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், ஷோரிஃபுல் இஸ்லாம், நயீம் ஹசன், கலீத் அகமது, தைஜுல் இஸ்லாம்.

நியூசிலாந்து: டெவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளன்டெல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ (கே), அஜாஸ் பட்டேல், மாட் ஹென்றி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: டாம் லாதம்
  • பேட்ஸ்மேன்கள்: முஷ்பிகுர் ரஹீம், கேன் வில்லியம்சன், டெவோன் கான்வே, நஜ்முல் ஹொசைன் சாண்டோ
  • ஆல்ரவுண்டர்: டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர் (துணை கேப்டன்), ரச்சின் ரவீந்திரா (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ்
  • பந்துவீச்சாளர்கள்: அஜாஸ் படேல், தைஜுல் இஸ்லாம்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை