BAN vs NZ: வங்கதேசத்தை வீழ்த்தி கம்பேக் கொடுத்த நியூசிலாந்து! 

Updated: Sun, Sep 05 2021 19:09 IST
BAN vs NZ: New Zealand, win by 52 runs to get off the mark in the series. (Image Source: Google)

வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ஹென்றி நிக்கோலஸ் 36 ரன்களையும், டாம் பிளண்டல் 30 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் சைஃபுதின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் அந்த அணியில் 3 பேரைத் தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. 

இதனால் 19.4 ஓவர்களிலேயே வங்கதேச அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஆஜஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், கோல் மெக்கன்சி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதன் மூலம் நியூசிலாந்து அணி 52 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் தொடரில் நீடித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை