வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது நைம், சைஃப் ஹொசைன் ஆகியோர் ஷாஹின் அஃப்ரிடியின் அடுத்தடுத்து பந்தில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹொசைன் - அஃபிஃபி ஹொசைன் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர்.
பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் 40 ரன்களில் வெளியேற, அஃபிஃப் ஹொசைனும் 20 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அடுத்து வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: T20 World Cup 2021
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃபிரிடி, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.