BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!

Updated: Sun, May 23 2021 20:34 IST
BAN vs SL: Bangladesh won the toss and elected to bat first!
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி தாக்காவில் இன்று நடைபெறுகிறது. முன்னதாக பயோ பபுளில் இருந்த இலங்கை அணி வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வந்தது. இதனால் இன்றைய போட்டி ஒத்திவைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் வீரர்களுக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானதை அடுத்து, முதல் ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி இன்று நடக்கிறது.

தாக்காவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பால் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். 

வங்கதேசம்: தமீம் இக்பால் , லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் , முகமது மிதுன், முஹ்மதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன், முகமது சைபுதீன், டாஸ்கின் அகமது, முஸ்தாபிசூர் ரஹ்மான்.

இலங்கை: குசல் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, பாதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தாசுன் ஷானகா, ஆஷென் பண்டாரா, வனிந்து ஹசரங்கா, இசுரு உதனா, லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சமீரா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை