வங்கதேசம் vs இலங்கை, முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Tue, Mar 12 2024 14:57 IST
வங்கதேசம் vs இலங்கை, முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs இலங்கை
  • இடம் - ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானம், சட்டோகிராம்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதேபோல் இங்கு குறைந்த அளவிலான பவுன்ஸ் மட்டுமே கிடைக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆதரவு இருக்கும். இதனால் இந்த மைதானத்தில் ரன்களைச் சேர்ப்பது கடினமாக பார்க்கப்படுகிறது. மேலும் நின்று விளையாடும் பேட்டர்களால் ரன்களைச் சேர்க்க முடியும். இதனல் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை 

வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 54
  • இலங்கை - 42
  • வங்கதேசம் - 10
  • முடிவில்லை - 02

உத்தேச லெவன்

வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), சௌமியா சர்க்கார், மஹ்முதுல்லா, முஷ்பிக்கூர் ரஹீம், மெஹதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தைஜுல் இஸ்லாம்

இலங்கை: குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, சதீர சமரவிக்ரம, அவிஷ்க ஃபெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்கா, துஷ்மந்த சமீர, துனித் வெல்லகாகே, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்க

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: லிட்டன் தாஸ், குசல் மெண்டிஸ், முஸ்பிகுர் ரஹீம்
  • பேட்டர்ஸ்: சரித் அசலங்கா, மஹ்முதுல்லா
  • ஆல்-ரவுண்டர்கள்: சௌமியா சர்க்கார், வனிந்து ஹசரங்க (கேப்டன்), மெஹதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ்
  • பந்துவீச்சாளர்கள்: ஷோரிஃபுல் இஸ்லாம்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை