BAN vs SL, 2nd Test: முஷ்பிக்கூர், லிட்டன் தாஸ் சதத்தால் தப்பிய வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால் - மொஹமதுல் ஹசன் ஆகியோர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய நஜிமுல் ஹசன், மொமினுல் ஹக், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹிம் - லிட்டன் தாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து லிட்டன் தாசும் சதம் விளாசி அசத்தினார்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 135 ரன்களையும், முஷ்பிக்கூர் ரஹிம் 115 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.