WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Mon, Feb 26 2024 22:12 IST
Image Source: Cricketnmore

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளிலும் அதிரடி வீராங்கனைகள் நிறைந்திருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் -  இரவு 7.30 மணி 

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 01
  • குஜராத் ஜெயப்ட்ஸ் - 01

பிட்ச் ரிப்போர்ட்

இத்தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானத்தில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க முடியும். மேலும்  இங்கு நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளிலுமே இறுதிப்பந்து வரை சென்றுள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: சோஃபி டிவைன், ஸ்மிருதி மந்தனா (கே), சபினேனி மேகனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பாட்டீல், சிம்ரன் பகதூர், ரேணுகா தாக்கூர் சிங், ஆஷா சோபனா.

குஜராத் ஜெயண்ட்ஸ்: பெத் மூனி (கே), வேதா கிருஷ்ணமூர்த்தி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஆஷ்லே கார்ட்னர், ஹர்லீன் தியோல், தயாளன் ஹேமலதா, ஸ்நே ராணா, தனுஜா கன்வர், கேத்ரின் பிரைஸ், லியா தஹுஹு, மேக்னா சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: பெத் மூனி, ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: ஸ்மிருதி மந்தனா, சப்பினேனி மேகனா, ஃபோப் லிட்ச்ஃபீல்ட்
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டிவைன், எலிஸ் பெர்ரி (கேப்டன்), சோஃபி மோலினக்ஸ், ஆஷ்லே கார்ட்னர் (துணை கேப்டன்), கேத்ரின் பிரைஸ்
  • பந்து வீச்சாளர்கள்: லியா தஹுஹு

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை