யுஏஇ-யுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வங்கதேசம்!

Updated: Mon, May 19 2025 19:54 IST
Image Source: Google

 ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே வங்கதேச அணி முதல் போட்டியை வென்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதேசமயம் யுஏஇ அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும்.

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறு என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், வங்கதேச அணியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதன்படி இத்தொடரில் மேலும் ஒரு டி20 போட்டியானது சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது டி20 போட்டி மே 21 அன்று ஷார்ஜாவில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. 

இதுகுறித்து வெளியான தகவலின்  அடிப்படையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூடுதல் போட்டியை நடத்தக் கோரியதாகவும், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக மே 25 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இதுவரை நிச்சமற்றதாக இருப்பதாகவும், அதன் காரணமாக இத்தொடரில் மேலும் ஒரு டி20 போட்டியனது சேர்க்கபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருந்தது. மேலும் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் மே 25ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது இடைநிறுத்தப்பட்டது. 

Also Read: LIVE Cricket Score

பின்னர் தற்போது மே17 முதல் மீண்டும் தொடங்கிய அத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதி நடைபெற இருப்பதன் காரணமாக, பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரை மே 27ஆம் தேதி தொடங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்ததுள்ளது. இதனைத்தொடர்ந்து வங்கதேச அணியானது தற்சமயம் யுஏஇ அணியுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை