ஆசிய கிரிக்கெட் கவுன்சின் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற  அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் கலாம் அல்மீன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஸவாத் அப்ராரும் 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹகிம் தமிமும் 16 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த முகமது ஷிஹாப் ஜேம்ஸ் மற்றும் ரிஸாத் ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், முகமது ஷிஹப் ஜேம்ஸ் 40 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து ரிஸாத் ஹொசைன் 47 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஃபரித் ஹசன் 39 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் வங்கதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சேட்டன் சர்மா, யுத்ஜித் குஹா, ஹர்திக் ராஜ் அகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஆயுஷ் மாத்ரே ஒரு ரன்னிலும், வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் 20 ரன்களுக்கும், கார்த்திகேயா 21 ரன்னிலும், கேப்டன் முகமது அமான் 26 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஹர்திக் ராஜ் 24 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 35.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களில் ஆல் அவுட்டானது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

வங்கதேச அணி தரப்பில் இக்பால் ஹொசைன் மற்றும் ஹகிம் தமிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் வங்கதேச யு19 அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய யு19 அணியை வீழ்த்தியதுடன், ஆசிய் கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இக்பால் ஹொசைன் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதினை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News