தானும் மற்ற வெளிநாட்டு வீரர்களும் நிம்மதியாக உணர்கிறோம் - ரிஷாத் ஹொசைன்!
பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக, இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இத்தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் இறுதிநேரத்தில் ஐக்கிய அரபு ஆமீரக கிரிக்கெட் வாரியாம பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்க மறுத்ததை தொடர்ந்து இத்தொடரானது தேசி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் தற்சமயம் பாதுகாப்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கான இந்தப் பயணத்தின் போது, வெளிநாட்டு வீரர்களிடையே ஒருவித அச்சச் சூழல் காணப்பட்டது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோசமான சூழ்நிலைக்கு மத்தியில் துபாயை அடைந்த பிறகு, தானும் மற்ற வெளிநாட்டு வீரர்களும் நிம்மதியாக இருப்பதாக வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரிஷாத் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிஷாத் ஹொசைன், “நாங்கள் துபாய் வந்தடைந்த பிறகு நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல், இனி ஒருபோதும் பாகிஸ்தானில் விளையாட மாட்டேன் என்று தன்னிடம் கூறினாஅர். அதேபோல் சாம் பில்லிங்ஸ், டேரில் மிட்செல், குசல் பெரேரா, டேவிட் வீஸ், டாம் கரன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையாஇக் கண்டு மிகவும் பயந்தனர். ஒட்டுமொத்தமாக, அவர்கள் அனைவரும் பயந்தனர்.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக நாங்கள் துபாய் புறப்பட இருந்த நிலையில் பாகிஸ்தானின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அறிந்த இங்கிலாந்து வீரர் டாம் கரண் ஒரு சிறு குழந்தையைப் போல அழத் தொடங்கினார். அந்த நேரத்தில், அவரை கவனித்துக் கொள்ள இரண்டு அல்லது மூன்று பேர் தேவைப்பட்டனர். நாங்கள் ஒரு நெருக்கடியைச் சமாளித்து துபாயை அடைந்துவிட்டோம், இப்போது நான் நன்றாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.