BAN vs AUS, 5th T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, Aug 08 2021 13:48 IST
Bangladesh vs Australia, 5th T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தாக்காவில் நடைபெற்று வருகிறது. 

இதுவரை இத்தொடரில் நடைபெற்ற நான்கு போட்டிகளில் வங்கதேச அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய போராடி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள் 

  •     மோதும் அணிகள் - வங்கதேசம் - ஆஸ்திரேலியா
  •     இடம் - ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா
  •     நேரம் - மாலை 5.30 மணி

போட்டி முன்னோட்டம்

மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராக முதல் முறை டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதிலும் வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு உதவியுள்ளனர். 

ஷகிப் அல் ஹசன், முகம்து நைம், அஃபிஃப் ஹசன், நுருல் ஹசன் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், நாளைய போட்டியிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதேசமயம் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை இழந்தாலும், நான்காவது போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. தொடர்ந்து அந்த படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதே, அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

அந்த அணியின் மிட்செல் மார்ஷை தவிர மற்ற அனைவரும் சோபிக்க தவறிவருவதால், அந்த அணி முதல் முறையாக வங்கதேசத்திடம் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  •     மோதிய ஆட்டங்கள் - 8
  •     ஆஸ்திரேலியா வெற்றி - 5
  •     வங்கதேச வெற்றி - 3

உத்தேச அணி

வங்கதேசம் - சௌமியா சர்கார், முகமது நைம், ஷகிப் அல் ஹசன், நூருல் ஹசன், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன், ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அகமது.

ஆஸ்திரேலியா - பென் மெக்டர்மோட், அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், மோயிஸ் ஹென்ரிக்ஸ், ஆஷ்டன் டர்னர், டேனியல் கிறிஸ்டியன், மேத்யூ வேட் (கே), ஆஷ்டன் அகர், ஆண்ட்ரூ டை, மிட்செல் ஸ்வெப்சன், ஜோஷ் ஹேசில்வுட்/ மிட்செல் ஸ்டார்க்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள்-நூருல்-ஹசன்
  • பேட்ஸ்மேன் - பென் மெக்டர்மொட், ஹென்ரிக்ஸ்
  • ஆல் -ரவுண்டர்கள் - ஷாகிப் அல் ஹசன், அஃபிஃப் ஹொசைன், மஹேதி ஹசன், மிட்செல் மார்ஷ், டேனியல் கிறிஸ்டியன்
  • பந்துவீச்சாளர்கள் - ஷோரிஃபுல் -இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், மிட்செல் ஸ்வெப்சன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை