BAN vs NZ, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Sep 02 2021 19:41 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழலில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (செப்.3) தாக்காவில் நடபெறவுள்ளது. ஏற்கெனவே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளதால் இப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது..

போட்டி தகவல்கள் 

  •     மோதும் அணிகள் - வங்கதேசம் - நியூசிலாந்து
  •     இடம் - ஷேர் பங்களா மைதானம், தாக்கா
  •     நேரம் - மாலை 5.30 மணி 

போட்டி முன்னோட்டம்

மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி, நியூசிலாந்துடனான முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் நாளை இரண்டாவது டி20 போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

அதிலும் குறிப்பாக வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் முஸ்தபிசூர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், சைஃபுதீன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அந்த அணிக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. பேட்டிங்கில் ஷகிப், மஹ்மதுல்லா, முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வங்கதேச அணி நிச்சயம் இத்தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை வங்கதேச அணியிடம் முதல்முறையாக தோல்வியைத் தழுவியது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அணியில் டாம் லேதம், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோரைத் தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்காததே அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனால் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி செய்த தவறுகளைத் திருத்தி, மீண்டும் கம்பேக் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  •     மொத்த போட்டிகள் - 11
  •     நியூசிலாந்து வெற்றி - 10
  •     வங்கதேசம் - 1

உத்தேச அணி
வங்கதேசம் -
முகமது நைம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா (கே), முஷ்பிக்கூர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், மஹதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அஹ்மத்.

நியூசிலாந்து - ரச்சின் ரவீந்திரா, டாம் ப்ளண்டெல், வில் யங், கொலின் டி கிராண்ட்ஹோம், டாம் லாதம் (கே), ஹென்றி நிக்கோல்ஸ், கோல் மெக்கன்சி, டக் பிரேஸ்வெல், அஜாஸ் பட்டேல், பிளேர் டிக்னர், ஜேக்கப் டஃபி.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

ஃபேண்டஸி லெவன்

  •     விக்கெட் கீப்பர்கள் - முஷ்பிக்கூர் ரஹீம், டாம் லேதம்
  •     பேட்ஸ்மேன்கள் - முகமது நைம், மஹ்மதுல்லா,ஹென்றி நிக்கோலஸ்
  •     ஆல் -ரவுண்டர்கள் - மெஹதி ஹசன், ஷகிப் அல் ஹசன், கோல் மெக்கன்சி
  •     பந்துவீச்சாளர்கள் - முஸ்தபிசூர் ரஹ்மான், அஜாஸ் பட்டேல், பிளேர் டிக்னர்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை