வங்கதேசம் vs இலங்கை : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Mon, May 24 2021 18:39 IST
Bangladesh vs Sri Lanka, 2nd ODI – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது.

போட்டி தகவல்கள்

  • தேதி : மே 25, 2021, செவ்வாய்க்கிழமை
  • நேரம் : மதியம் 12.30 மணி 
  • மைதானம்: ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா.

போட்டி முன்னோட்டம்

வங்கதேசம்

தமிம் இக்பால் தலைமையிலான வங்கதேச அணி நேற்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்துள்ளது. 

அதிலும் கேப்டன் தமிம் இக்பால், முஸ்பிக்கூர் ரஹீம், மஹ்மதுல்லா ஆகியோரது சிறப்பான ஆட்டம் அணிக்கு வலுவைச் சேர்த்தது. பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரஹ்மான், மெஹதி ஹசன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு எதிரணி ரன் வேகத்தை தடுத்து நிறுத்தினர். 

நாளை நடைபெறும் போட்டியில் இவர்களது ஃபார்ம் சிறப்பாக அமையும் பட்சத்தில், வங்கதேச அணி ஏறத்தாழ தொடரை கைப்பற்றுவது உறுதியாகும். 

இலங்கை

அணியில் குசால் பெரெரா, குசால் மெண்டிஸ், குனத்திலகா உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், அவர்கள் சோபிக்க தவறியதால் நேற்றைய போட்டி இலங்கை அணியின் கையிலிருந்து நலுவியது. 

அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பந்துவீச்சில் சமீரா, தனசெயா ஆகியோரது பந்துவீச்சி அமைந்திருந்தது. ஒருவேளை நாளைய போட்டியில் இலங்கை அணி தோற்கும் பட்சத்தில் தொடரை இழக்கும். 

இதனால் அனுபவ வீரர்கள் இல்லாத இலங்கை அணி பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

உத்தேச அணி

வங்கதேச அணி: தமீம் இக்பால் (இ), லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்ஃபிகூர் ரஹீம், முகமது மிதுன், மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன், டாஸ்கின் அகமது, முஸ்தாபிஸூர் ரஹ்மான், டஸ்கின் அஹ்மது.

இலங்கை: தனுஷ்கா குணதிலகா, குசல் பெரேரா (கேப்டன்), பாதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், தாசுன் ஷானகா, தனஞ்சய டி சில்வா, ஆஷென் பண்டாரா, வனிந்து ஹசரங்கா, இசுரு உதனா, லக்ஷன் சந்தகன், துஷ்மந்தா சமீரா.

ஃபேண்டஸி லெவன் குறிப்பு

விக்கெட் கீப்பர்கள் - முஷ்ஃபிகூ ரஹீம், குசல் பெரேரா
பேட்ஸ்மேன்கள் - தமீம் இக்பால், மஹ்மதுல்லா, பதும் நிசங்கா, 
ஆல்ரவுண்டர்கள் - ஷாகிப் அல் ஹசன், வாணிந்து ஹசரங்கா, தனஞ்சய டி சில்வா
பந்து வீச்சாளர்கள் - மெஹிடி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், இசுரு உதானா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை