வங்கதேச டெஸ்ட் அணி கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் நியமனம்!
வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து மொமினுல் ஹக் விலகியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் அவர் அந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் 2019 ஒக்டோபர் முதல் 17 டெஸ்டுகளில் அணியை வழிநடத்தியுள்ளார், அவற்றில் மூன்றில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது
ஆனால் மீதமுள்ள 12 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன. இதன் காரணமாக வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பதிவியிலிருந்து மொமினுல் ஹக் விலகியுள்ளார்.
இந்நிலையில் இம்மாதம் வெஸ்ட் இண்டீஸுல் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து வங்கதேச டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹொசைன் உறுதிசெய்துள்ளார். இதனால் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.