டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகினார் தமிம் இக்பால்!
வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால். இவர் இந்தாண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது முழங்காலில் காயமடைந்தார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைப் பெற்ற இவர், ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களிலிருந்து விலகினார்.
இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் குணமடையாததால் அவர், இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தர்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் முதல் அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தனது காயம் குணமடையுமா என்பது தெரியாததால், அதிலிருந்து விலகுவதாக தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தமிம் இக்பால்,“சிறிது நேரத்திற்கு முன்பு, நான் எங்கள் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் தலைமை தேர்வாளார் அகியோரிடம் கூறியதைஉங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் அவர்களிடம், நான் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்போம் என்று நினைக்கவில்லை. நான் இத்தொடரிலிருந்து விலகுவதற்கு சில காரணங்கள் உள்ளன.
அதில் உலகக்கோப்பை நடைபெறும் காலம் மிகமுக்கியமானது. ஏனெனில் நான் நீண்ட நாள்களாக டி20 போட்டிகளில் விளையாடாமல் உள்ளேன். அதிலும் என்னுடைய முழங்கால் காயம் இன்னும் சரியாகத நிலையில், என்னால் இத்தொடருக்கு தயாராவது இயலாத ஒன்று” என தெரிவித்துள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
தற்போது 32 வயதாகும் தமிம் இக்பால் வங்கதேச அணிக்காக 78 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1,758 ரன்களைச் சேர்த்துள்ளார். இதனால் உலகக்கோப்பை தொடரில் இவர் இல்லாதது வங்கதேச அணிக்கு பெரும் இழப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.