பிபிஎல் 2021: ரினிகேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பிரிஸ்பேன் ஹீட்!

Updated: Mon, Dec 13 2021 18:05 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசியது. 

அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், மெக்கன்சி ஹார்வியின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. 

இதில் மெக்கன்சி ஹார்வி 71 ரன்களைச் சேர்த்தார். பிரிஸ்பேன் அணி தரப்பில் ஜேம்ஸ் பாஸ்லி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய பிரிஸ்பேன் அணியில் பிரையண்ட் 18, கிறிஸ் லின் 32, டக்கெட் 11 என விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். 

இருப்பினும் சாம் ஹஸ்லெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் 16.5 ஓவர்களிலேயே பிரிஸ்பேன் அணி இலக்கை எட்டி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை