பிபிஎல் 12: பிரிஸ்பேன் ஹீட்டை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!

Updated: Sat, Jan 07 2023 21:45 IST
BBL 12: Perth Scorchers beat Brisbane Heat by 7 wickets! (Image Source: Google)

பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்  செய்த பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர்கள் காலின் முன்ரோ மற்றும் ஜோஷ் பிரௌன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இதில் காலின் முன்ரோ 26 பந்தில் 45 ரன்களும், ஜோஷ் பிரௌன் 21 பந்தில் 34 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் 27 ரன்களும், பியர்சன் 23 ரன்களும் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது.  20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது. பெர்த் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஸ்டீஃபன் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்தா கேமரூன் பான்கிராஃப்ட் - ஆரோன் ஹார்டி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பின் 33 பந்துகளி 57 ரன்களைச் சேர்த்திருந்த ஹார்டி விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸும் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். 

இருப்பினும் மறுமுனையில் கேமரூன் பான்கிராஃப்ட் 48 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அவரது அதிரடியால் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 16.3 ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை