பிபிஎல் 12: பிரிஸ்பேனை வீழ்த்தி 5ஆவது முறையாக கோப்பையை வென்றது பெர்த் ஸ்காச்சர்ஸ்!

Updated: Sat, Feb 04 2023 17:41 IST
BBL 12: Perth Scorchers win by five wickets against Brisbane Heat and claim a record fifth Big Bash (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு பெர்த் ஸ்காச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் முன்னேறின.

பெர்த் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜோஸ் பிரௌன் - சாம் ஹீஸ்லெட் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

அதன்பின் ஜோஷ் பிரௌன் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 25 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் 2ஆவது விக்கெட்டுக்கு சாம் ஹீஸ்லெட் மற்றும் மெக்ஸ்வீனி இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 79 ரன்களை சேர்த்து கொடுத்தனர். ஹீஸ்லெட் 34 ரன்களும், மெக்ஸ்வீனி 41 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். 

பின்வரிசையில் மேக்ஸ் பிரயண்ட் அதிரடியாக ஆடி 14 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்தார். சாம் ஹைன் 21 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் பார்ட்லெட் சிக்ஸர் அடித்து முடிக்க, 20 ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணி 175 ரன்கள் அடித்தது. பெர்த் அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், மேத்யூ கெல்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கு ஸ்டீபன் - காமரூன் பான்கிராஃப் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஸ்டீபன் 21 ரன்களில் ஆட்டமிழக்க, பான்கிராஃப்ட் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த ஆரோன் ஹார்டியும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்லிஸ் - ஆஷ்டன் டர்னர் இணை அதிரடியான ஆட்டத்தைவெளிப்படுத்தி பவுண்டரி மழை பொழிந்தது. இதில் ஜோஷ் இங்லிஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஆஷ்டன் டர்னர் அரைசதம் அடித்த கையோடு 53 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து களமிறங்கிய நிக் ஹாப்சன் - கூப்பர் கோனோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் நிக் ஹாப்சன் 18 ரன்களையும், கோனோலி 25 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தியதுடன், 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை