BBL 12: மீண்டும் அசத்திய மேத்யூ ஷார்ட்; தண்டரை வீழ்த்தியது ஸ்டிரைக்கர்ஸ்!

Updated: Tue, Dec 20 2022 19:09 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த சிட்னி தண்டர் அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் மேத்யூ கில்க்ஸ், ரைலீ ரூஸோவ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் - ஒலிவியர் டேவிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அரைசதம் கடந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 68 ரன்களில் ஆட்டமிழக்க,ஒலிவியர் டேவிஸ் 42 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை துரத்திய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேக் வெதர்லட் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கிறிஸ் லின் 28, காலின் டி கிராண்ட்ஹோம் 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை