பிபிஎல் 2021: வீரர்களுக்கு பரவிய கரோனா; அச்சத்தில் வீரர்கள்!

Updated: Fri, Dec 31 2021 11:49 IST
BBL: 15 Melbourne Stars Team Members Test Covid Positive (Image Source: Google)

மெல்போர்ன் ஸ்டார்ஸ், சிட்னி தண்டர் ஆகிய இரு அணிகளைச் சேர்ந்த 11 வீரர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பயோ பபுள் சூழலில் நடந்துவந்த பிக் பேஷ் லீக் தொடர் இரு அணிகளைச் சேர்ந்த 11 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி நிர்வாகம் விடுத்த அறிக்கையில் “ எங்கள் அணியில் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் ஊழியர்கள் 8 பேர் 7 வீரர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதியான வீரர்கள் அனைவரும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிட்னி தண்டர் விடுத்த அறிக்கையில் “ 4 வீரர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லைத் தெரியவந்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் முன் மீண்டும் வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை வழங்கிய சுகாதார விதிகளைக் கடைபிடித்து பரிசோதனை நடத்தப்படும் ” எனத் தெரிவி்த்துள்ளது.

மேலும் அடிலெய்டில் இன்று இரவு சிட்னி தண்டர்ஸ் அடிலைய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் மோதல் நடத்த இருந்த நிலையில் வீரர்களுக்குப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை