பிபிஎல் 2022: நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!

Updated: Fri, Jan 28 2022 18:09 IST
BBL 2022: Perth Scorchers Lift Fourth BBL Trophy, Beat Sydney Sixers By 79 Runs (Image Source: Google)

ஆஸ்திரேலியாவின் பிரபல உள்ளூர் டி20 லீக்கான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பெர்த் அணியில் ஆஷ்டன் டர்னர், லௌரி எவன்ஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக லௌரி எவன்ஸ் 76 ரன்களையும், ஆஷ்டன் டர்னர் 54 ரன்களையும் சேர்த்தனர். 

இதியடுத்து வெற்றி இலக்கை துரத்திய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியளிக்கும் வகையில் ஹெய்டன் கெர், நிக்கோலஸ் பெர்ட்ஸ், ஹென்ரிக்ஸ், கிறிஸ்டியன், அவெண்டானோ, சீன் அபேட் என அடுத்தடுத்து ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

ஒருமுனையில் நிதானமாக விளையாடி வந்த டேனியல் ஹூக்ஸும் 42 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 16.2 ஓவர்களிலேயே சிட்னி சிக்சர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்தது. பெர்த் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி நான்காவது முறையாக பிக் பேஷ் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை