Laurie evans
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் மேயர்ஸுடன் இணைந்த ஜோ கிளார்க் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதன்பின் 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் கைல் மேயர்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் பெப்பர் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Related Cricket News on Laurie evans
-
ஐஎல்டி20 2024: அரைசதமடித்து அசத்திய சாம் ஹைன், எவான்ஸ்; கேப்பிட்டல்ஸுக்கு 184 டார்கெட்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 13: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மைக்கேல் நேசர்; பிரிஸ்பேன் ஹீட் அசத்தல் வெற்றி!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: லௌரி எவன்ஸ், லான்ஸ் மோரிஸ் அபாரம்; பெர்த் ஸ்காச்சர்ஸ் அசத்தல் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிபிஎல் 2022: சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தது. ...
-
பிபிஎல் 2022: டர்னர், எவன்ஸ் அதிரடி; சிக்சர்ஸுக்கு 172 டார்கெட்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24