பிபிஎல் 2022: பிரிஸ்பேனை வீழ்த்தியது சிட்னி!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான 36ஆவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி டேனியல் ஹூக்ஸ் மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டேனியல் ஹூக்ஸ் 59 ரன்களையும், டேனியல் கிறிஸ்டியன் 32 ரன்களையும் சேர்த்தனர். பிரிஸ்பேன் அணி தரப்பில் நெசர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய பிரிஸ்பேன் அணிக்கு மேக்ஸ் பிரையண்ட், கிறிஸ் லின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் கிறிஸ் லின் 19 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையிலிருந்த மேக்ஸ் பிரையண்ட் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதன் காரணமாக பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.