BBL 2022: பரபரப்பான ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!

Updated: Tue, Dec 13 2022 19:39 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 லீக் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஜோ கிளர்க் - டாம் ரோஜர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிளார்க் 11 ரன்களிலும், ரோஜர்ஸ் 14 ரன்களோடும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க அடுத்து வந்த பர்ன்ஸ் 18 ரன்களோடு ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் களத்திலிருந்து வெளியேறினார். 

பின்னர் களமிறங்கிய நிக் லார்கின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே எடுத்தது. 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர் அணியில் மேத்யூ கில்க்ஸ், ரைலி ரூஸோவ் ஆகியோர் அடுத்தடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 16 ரன்களிலும், கேப்டன் ஜேசன் சங்கா 24 ரன்களோடும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய அலெக்ஸ் ரோஸ் 28, டேனியல் சாம்ஸ் 3, ஒலிவியர் டேவிஸ் 11, கிறிஸ் கிரீன் 17 ரன்கள் என தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ ஆட்டம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் பக்கம் திரும்பியது. அதன்பின் களமிறங்கிய குரிந்தர் சந்து 16 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.

அதிலும் கடைசி ஓவரில் சிட்னி தண்டரின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குரிந்தர் சந்து 6 அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைச்சென்றது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சிட்னி தண்டர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி வெற்றியுடன் நடப்பாண்டு சீசனை தொடங்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை