ஐபிஎல் 2021 : மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு; முதல் போட்டியே இவங்களுக்கு தான்!

Updated: Sun, Jul 25 2021 20:00 IST
Image Source: Google

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக குதித்துள்ளது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கரோனா பரவல் அச்சுறுத்தல் குறையாத காரணத்தினால் ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மீதம் உள்ள போட்டிகளுக்கான முழு அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. 

அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்த அணிகளை முதல் போட்டியில் மோதவிட்டால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

ஐபிஎல் தொடரின் ஃபிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ஆம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ஆம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2ஆவது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை