ரஞ்சி கோப்பை: கொல்கத்தாவில் நாக் அவுட் போட்டிகள்!
கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் பயோ பபுள் சூழலுன் இந்தாண்டு ரஞ்சி கோப்பை உள்ளிட்ட அனைத்து வகையான முன்னணி கிரிக்கெட் தொடர்களையும் பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் இத்தொடர்களுக்கான அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி சையீத் முஷ்டாக் அலி கோப்பைப் தொடர் அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 22ஆம் தேதி வரையும், விஜய் ஹசாரே கோப்பை தொடர் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையும், ரஞ்சி கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதியும் முடிவடையவுள்ளது.
மேலும் இதில் நடைபெறும் போட்டிகளிலும் எந்த அணியும் தங்கள் சொந்த மண்ணில் விளையாட முடியாத படி பிசிசிஐ அட்டவணையை உருவாக்கியுள்ளது. அதேபோல் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று போட்டிகள் டெல்லியிலும், ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று கொல்கத்தாவிலும் நடைபெறும் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
அதன்படி ரஞ்சி போட்டி - மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஆமதாபாத், திருவனந்தபுரம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. மேலும் கொல்கத்தாவில் நாக் அவுட் சுற்றுகள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 20 முதல் நாக் அவுட் ஆட்டங்கள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.