தினேஷ் கார்த்திக்கிற்கு எச்சரிக்கை விடுத்த தேர்வு குழு!

Updated: Sun, Jul 10 2022 20:05 IST
Image Source: Google

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

டி20 உலகக்கோப்பைக்காக உருவாக்கப்பட்டு வரும் இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவர் தினேஷ் கார்த்திக் தான். அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், இங்கிலாந்து தொடரில் சற்று சொதப்பியுள்ளார். முதல் போட்டியில் 7 பந்துகளில் 11 ரன்களும், 2ஆவது போட்டியில் 17 பந்துகளில் 12 ரன்களையும் மட்டுமே அடித்து ஏமாற்றினார்.

முதல் போட்டியில் அதிரடி காட்ட முயன்று அவுட்டான போதும், 2ஆவது போட்டியில் அவர் தேவையில்லாத ரன் அவுட்டால் விக்கெட்டை பறிகொடுத்தார். இல்லையென்றால் இந்திய அணிக்கு மேலும் 20 ரன்கள் வரை ஸ்கோர் உயர்ந்திருக்கும். இந்நிலையில் இதுகுறித்து தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

போட்டி முடிந்த பிறகு அவருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில், “கடந்த 2 போட்டிகளிலும் நீங்கள் சரியாக விளையாடவில்லை. அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க தொடர்களில் விளையாடியதன் மூலம் உங்களின் ஃபார்மை அறிந்தோம். ஆனால் ரன் அவுட் விஷயங்களில் கவனம் தேவை.

2ஆவது டி20 போட்டியில் அந்த ரன் அவுட்டை உங்களால் தவிர்த்திருக்க முடியும். ஜடேஜாவுடன் சரியான புரிதல் இருந்திருந்தால், பிரச்சினையே இருந்திருக்காது. மேலும் ரன் அவுட்டிற்காக டைவ் அடித்தீர்கள். அப்போது காயம் ஏற்பட்டிருந்தால், நிச்சயம் அணியிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகியிருக்கும். எனவே ரன் எடுக்கும் போது கூடுதல் கவனமாக இருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை