தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மோடி, ஷாருக், தோனி பெயரில் விண்ணப்பங்கள்!

Updated: Tue, May 28 2024 15:45 IST
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மோடி, ஷாருக், தோனி பெயரில் விண்ணப்பங்கள்! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.

மேற்கொண்டு நியூசிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.  ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கபோவதில்லை என ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்தனர்.

ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நாங்கள் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில்  இந்தநிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்தி சிங் தோனி  உள்ளிட்ட பெயர்களில் சுமார் 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி, வந்திருந்த விண்ணப்பங்களை பிசிசிஐ ஆராய்ந்ததில், போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெயர்களில் வ்ந்த விண்ணப்பங்களை பிசிசிஐ போலியானவை என அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த முறையும் இதுபோன்ற போலி விண்ணப்பங்களை பிசிசிஐ கண்டறிந்தது. அதைப்போலவே இந்த முறையும் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை