ஐபிஎல் 2022: வீரர்களின் உடற்தகுதியை கண்காணிக்க பிசிசிஐ திட்டம்!

Updated: Sun, Mar 13 2022 14:22 IST
Image Source: Google

ஐபிஎல் மீது நீண்ட நாட்களாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும், அதனை மறைத்து தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இதனால் வீரர்களின் காயம் அதிகமாகி, அவர்கள் இந்தியாவுக்கு விளையாடுவது பாதிக்கப்படுகிறது. இது போல் பல சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால் ஊதியம் போய்விடும் என்று வீரர்களும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக காயமடைந்த வீரர்களை தொடர்ந்து அணிகளும் பயன்படுத்துகிறது.

இதனை தடுப்பதற்காக தான் தற்போது பிசிசிஐ ஒரு புதிய முடிவை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, பிசிசிஐ ஓப்பந்தம் பெற்றுள்ள வீரர்களின் உடல் தகுதியை இனி தேசிய கிரிக்கெட் அகாடமியின் நிர்வாகிகளே கண்காணிப்பார்கள். இந்திய அணியின் டிரைனர்கள் கொடுக்கும் உடல்தகுதி வழிமுறையையே வீரர்கள் பின்பற்ற வேண்டும்.

வீரர்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டால், அவர்களை பிசிசிஐயே இனி முழுமையாக கண்காணிக்கும். தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளர்களுடன் இந்திய அணி வீரர்கள் உரையாட, தேவைப்பட்டால் சோதனை மேற்கொள்ள ஐபிஎல் அணிகள் அனுமதிக்க வேண்டும். 18 மாதங்களில் 2 உலககோப்பை நடைபெற உள்ளதால் வீரர்களின் உடல் தகுதி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த சீசனில் மும்பை அணி, ஹர்திக் பாண்டியாவின் காயத்தை மறைத்து, அவர் பந்துவீச தொடங்கிவிட்டதாக பொய் சொன்னது. அதனை நம்பி டி20 உலககோப்பைக்கும் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் முழு உடல் தகுதி பெறவில்லை என்றும் காயமும் குணமாகவில்லை என்றும் பின்னர் தான் தெரியவந்தது. இதனால் புதிய திட்டத்தை பிசிசிஐ வகுத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை