இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா!

Updated: Thu, Jul 04 2024 22:57 IST
இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்னர். இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் கோப்பையுடன் வந்த இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் புடைசூழ உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்திய இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். மேலு டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். 

அதன்பின் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்த இந்திய வீரர்களுக்கு விமான நிலையத்திலும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் இந்திய வீரர்கள், அணியின் பயிற்சியாளர்கள், பிசிசிஐ உறுப்பினர்கள் என அனைவரும் டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்திய படி திறந்தவெளி பேருந்தில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணிக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாலையில் தொடங்க இருந்த இந்த பேரணியானது மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து திறந்தவெளி பேருந்தின் மூலம் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கி வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு வந்தடைந்தனர். வழி எங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் வீரர்களின் பேருந்தானது நகர்ந்து மும்பை வான்கடே மைதானத்தை வந்தடைந்தது. இதனையடுத்து மைதானத்தில் ஆயிரக்கனக்கான ரசிகர்கள் ஒன்று கூடி இந்திய அணி வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துனர். மேற்கொண்டு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தில் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

முன்னதாக உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் ரூ.125 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்டோர் வழங்கி கவுரவித்தனர். அதேசமயம் இந்திய அணி வீரர்களுக்கு மும்பையில் கொடுக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்தான காணொளிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அக்காணொளிகளானது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை