உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!

Updated: Tue, Aug 29 2023 16:16 IST
Image Source: Google

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்திய அணி தற்போது நாளை தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பின்னர் செப்டம்பர் 3ஆம் தேதி உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த முதன்மை அணியில் மாற்று வீரர்களும் இடம் பெற உள்ளனர். அதன் பின்னர் உலகக்கோப்பைக்கான இறுதி 15 பேர் கொண்ட அணியை அறிவிக்கும் கால கெடுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் 15 பேர் கொண்ட இறுதி அணி முடிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை