ஐபிஎல் 2022: இரு புது அணிகளை அறிமுகம் செய்வதற்காக காத்திருக்கும் பிசிசிஐ!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, தற்போது மீதமுள்ள போட்டிகள் அனைத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மேலும் இரு புதிய அணிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக, பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளையும் பிசிசிஐ முழுவீச்சில் நடத்தி வருகிறது.
இதற்கிடையில் புதிய அணிகளுக்கான உரிமம் மற்றும் பிற நடவடிக்கைகளில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ உயர்குழு அலுவலர் கூறுகையில்,“அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை சேர்க்கவுள்ளோம். ஆனால் அணியின் உரிமை மற்றும் பிற விஷயங்கள் குறித்து நாங்கள் முழுமையாக ஆரய்வது அவசியம். ஏனெனில் நாம் எதர்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஏனெனில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு இரண்டு புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.