மகளிர் ஐபிஎல் காட்சி போட்டிகள் 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு மகளிருக்கான காட்சி போட்டி நடைபெறவில்லை. தற்போது இந்த ஆண்டு மீண்டும் மகளிர் ஐபிஎல் தொடர் நடத்தப்படுகிறது.
Advertisement
ஆடவர் ஐபிஎல் பிளே ஆப் நடைபெறும் தினத்தில் 4 காட்சி போட்டிகள் நடக்கிறது. புனேயில் இந்த ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Advertisement
அடுத்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, அடுத்த ஆண்டு நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை நகரங்களையும் இணைந்து 5 முதல் 6 அணிகள் பங்கேற்கும் என தெரிவித்தார்.
பிசிசிஐயின் இந்த தகவலை அறிந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.