இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!

Updated: Sat, May 15 2021 17:13 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து வருகிற ஜூன் 2ஆம் தேதி இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படவுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா தொற்றினால், இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக இதிய வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

இந்நிலையில் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிசிசிஐயின் அறிவிப்பில்,“இந்திய வீரர்கள் மே 19ஆம் தேதி மும்பைக்கு வரும் முன் அவர்களுக்கு 3 முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இப்பரிசோதனையில் ரோனா இல்லை என வந்தால் மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவர். இதையடுத்து வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்களில் யாருக்கேனும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தொடரிலிந்து விலக்கப்படுவர் என பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை