ஜிம்பாப்வேவை பந்தாடியது ஸ்காட்லாந்து!
ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் முன்சி, கொட்ஸர், ஹர்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனார்.
இருப்பினும் அடுத்து களமிறங்கிய பெர்ரிங்டன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது. இதில் பெர்ரிங்டன் 82 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் வெஸ்லி மாதேவரே ரன் ஏதுமின்றியும், மருமணி 3 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஷரிஃப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியதுடன், டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.