ஐபிஎல் 2025: பிராவோ, அஸ்வின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!

Updated: Tue, Apr 01 2025 21:36 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் நாளை 2ஆம் தேதி நடைபெற இருக்கும் 14ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட்டுகள்

அதன்படி இந்தப் போட்டியில் புவனேஷ்வர் குமார் மேற்கொண்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் அதி விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைப்பார். முன்னதாக டுவைன் பிராவோ 161 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுநாள் வரை ஐபிஎல் தொடரில் சாதனையாக இருந்து வரும் நிலையில், புவனேஷ்வர் குமார் 177 போட்டிகளில் 182 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார். 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுள் வீழ்த்தி வீரர்கள்

  • யுஸ்வேந்திர சாஹல் - 205 விக்கெட்டுகள்
  • பியூஷ் சாவ்லா - 192 விக்கெட்டுகள்
  • டுவைன் பிராவோ - 183 விக்கெட்டுகள்
  • ரவிச்சந்திரன் அஸ்வின் - 183 விக்கெட்டுகள்,
  • புவனேஷ்வர் குமார் - 182 விக்கெட்டுகள்

அஸ்வினை முந்தும் வாய்ப்பு

இது தவிர, புவனேஷ்வர் குமார் இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில்  டி-20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிப்பார். தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 313 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியளில் யுஸ்வேந்திர சஹால் 364 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், பியூஷ் சாவ்லா 319 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக காயம் காரணமாக, புவனேஷ்வர் இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட முடியவில்லை. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில், களமிறங்கிய அவர் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இதனால் இனி வரும் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக புவனேஷ்வர் குமார் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை