டி20 உலகக்கோப்பை: ஸாம்பாவிற்கு காரோனா; ஆஸிக்கு பெரும் பின்னடைவு!

Updated: Tue, Oct 25 2022 20:36 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி, இன்று இலங்கை அணியுடன் இன்று பலப்பரிட்சை நடத்தியது. 

முன்னதாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் பாடுதோல்வியடைந்தது தொடரில் பின் தங்கியிருனது.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பாவிற்கு போட்டி தொடங்கும் 19 மணி நேரத்திற்கு முன்னதாக கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறி இருந்ததையடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியான காரணத்தினால் அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. மேலும் அவர் தொற்றிலிருந்து மீளும் வரை ஒரு சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை.

இதன்காரணமாக மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான ஆஷ்டன் அகர் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::