இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் பெரெரா மற்றும் தீக்சனாவின் ஆட்டத்தால் 46.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

Advertisement

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியை 8வது முறையாக தொடர்ந்து நியூசிலாந்து அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இதனிடையே இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து வெற்றிக்கு காரணமாக அமைந்த போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.

அதன்பின் பேசிய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் போல்ட், “புதிய பந்தில் சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. மிகமுக்கிய போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைத்தது நிறைவாக உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நிச்சயம் சவால் நிறைந்தவை. அதேபோல் இந்த வகையான போட்டிகளில் புதிய பந்தில் தொடங்குவது கொஞ்சம் சவால் நிறைந்தது. இன்றைய ஆட்டத்தில் எனது அனுபவத்தை கொஞ்சம் பயன்படுத்தினேன். அதேபோல் இந்திய மைதானங்களில் விளையாடுவது எளிதானதல்ல.

ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு சூழல், வெவ்வேறு பிட்ச். அதுவும் உலகக்கோப்பை தொடர் முழுவதுமென்றால், கூடுதல் சவால் நிறைந்ததாகும். இந்திய அணி அணி மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இதனால் அரையிறுதியில் யார் வெல்வார்கள் என்பதை காலம் தான் சொல்லும். அந்த போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி, இன்று வரை ரசிகர்களின் மனதில் அப்படியே உள்ளது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News