IND vs WI, 1st T20I: தோல்வி குறித்து பேசிய பொல்லார்ட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்ற நிலையில் டி20 தொடர் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 61 ரன்கள் எடுத்தார். ரவி பிஸ்னாய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 40, இஷான் கிஷன் 35 ரன்கள் எடுத்தார்கள். சூர்யகுமார் யாதவ் 34, வெங்கடேஷ் ஐயர் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
முதல் டி20யில் தோல்வியடைந்தது பற்றி பேசிய கீரன் பொல்லார்ட், “19 ஓவர்கள் வரை வந்தபிறகுதான் இலக்கை அவர்கள் வெற்றிகரமாக விரட்டினார்கள். இதனால் பந்துவீச்சாளர்கள் நன்குச் செயல்பட்டார்கள் எனலாம். 9 ஓவர்களில் 46 ரன்கள் தான் எடுத்தோம்.
அப்போது இன்னும் 10, 15 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கலாம். 6 முதல் 15 ஓவர்கள் வரை நாங்கள் குறைவான ரன்களே எடுத்தோம். அதேசமயம் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுத்திருந்தால் அவர்களை அழுத்தத்துக்கு ஆளாக்கியிருக்கலாம். பேட்டிங்கில் டாட் பந்துகளை நாங்கள் சரிசெய்யவேண்டும்” என்று தெரிவித்தார்.