காயம் காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான வனிந்து ஹசரங்கா இந்தியாவில் நடைறும் உலகக் கோப்பைத் தொடரிலிந்து விலகினார். ஒருநாள் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஸ் தீக்‌ஷனா இணை பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு எதிரணிக்கு சவால் அளிக்கக் கூடியவர்கள்.

Advertisement

காயம் காரணமாக ஹசரங்கா அணியில்  இல்லாத நிலையில், மஹீஸ் தீக்‌ஷனாவின் பந்துவீசும் பணி கூடுதல் சவால் நிறைந்ததாக உள்ளது. இதன்காரணமாக இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து படுதோல்வியைச் சந்தித்து தற்போது அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்தவிட்டது.

Advertisement

இந்த நிலையில், வனிந்து ஹசரங்கா  இலங்கை அணியில் இல்லாதது தனது பந்துவீச்சை சவாலானதாக மாற்றியுள்ளதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஹசரங்கா அணியில் இல்லாதது பின்னடைவாக உள்ளது. விக்கெட்டுகளை எடுக்கும் மிக முக்கியப் பந்துவீச்சாளர் அவர்.

நாங்கள் இருவரும் எங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுப்போம். சில நாள்களில் அவர் விக்கெட் எடுப்பார். சில நாள்களில் நான் விக்கெட் எடுப்பேன். எங்களது அணி தற்போது ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கும் அணியாக உள்ளது. இதனை சவாலாகவும், எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகவும்  பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News