பிபிஎல் 2022: நரைன் காட்டடி; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய விக்டோரியன்ஸ்!

Updated: Wed, Feb 16 2022 20:16 IST
Image Source: Google

பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் - கொமிலா விக்டோரியன்ஸ் அணிகள் மோதின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 44 ரன்களையும், அக்பர் அலி 33 ரன்களையும் சேர்த்தனர். விக்டோரியன்ஸ் அணி தரப்பில் ஷோஹிதுல் இஸ்லாம், மொயின் அலி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய விக்டோரியன்ஸ் அணிக்கு தொடக்க வீரர் சுனில் நரைன் அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தார். அதிலும் 13 பந்துகளில் அரைசதம் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி தள்ளினார்.

இதன்மூலம் கொமிலா விக்டோரியன்ஸ் அணி 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் கொமிலா விக்டோரியன்ஸ் அணி பங்களதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை