டி20 உலகக்கோப்பை: எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்? - பிராட் ஹாக் பதில்!

Updated: Thu, Oct 21 2021 17:49 IST
Image Source: Google

ஏழாவது டி20 உலக கோப்பை கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. தற்போது தகுதி போட்டிகள் நடந்துவரும் நிலையில், வரும் 23ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை நடக்கும் ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால் அந்த அணியும் சிறப்பாக ஆடும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

ஆனாலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 அணிகளுக்குமே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், “குரூப் 1இல் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ், குரூப் 2இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும்” என்று தெரிவித்துள்ளார். இதில் தனது சொந்த நாட்டு அணியான ஆஸ்திரேலிய அணியை பிராட் ஹாக் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை