இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு; ஐபிஎல் காரணமா? 

Updated: Wed, May 26 2021 15:14 IST
Image Source: Google

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடரை மீண்டும் நடத்துவது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் இன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனாது. 

இந்நிலையில் இத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது மற்றோரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது இந்திய அணி இந்தாண்டு செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடுவதாக இருந்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியுடனான தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது ரத்து செய்யப்படும் தொடருக்கு பதிலாக இந்தாண்டு இறுதியில் இரு அணிகளுக்கு இடையேயான தொடர் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை