46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய பிராண்டன் டெய்லர்!

Updated: Sun, Sep 28 2025 22:17 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா அணிகள் மோதின. ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற் போட்ஸ்வானா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மருமணி 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரையன் பென்னட்டுடன் இணைந்த அனுபவ வீரர் பிராண்டன் டெய்லர் அபாரமாக விளையாடியதுடன், மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பந்துகளை பறக்கவிட்டார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் டெய்லர் 46 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்காக டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா மட்டுமே டி20 கிரிக்கெட்டில் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 

Also Read: LIVE Cricket Score

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை