அக்தர், லீ, டைட்..? இவர்களில் யார் வேகமானவர் - பதில் கூறும் கிளார்க்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா அணி கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
மேலும் அத்தொடருடன் மைக்கேல் கிளார்க் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். மேலும் இவர் விளையாடிய காலத்தில் உலகின் அதிவேக பந்து வீச்சாளர்களான சோயிப் அக்தர், ஷான் டைட், பிரெட் லீ ஆகியோரும் விளையாடியுள்ளனர்.
ஆனால் இவர்கள் மூவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு மைக்கேல் கிளார்க் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மைக்கேல் கிளார்க்,“நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் வேகமான பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தான். அவர் தொடர்ந்து அதிவேகமாக பந்து வீச கூடிய நபர். மேலும் நான் பிளிண்டாஃப், பிரேட் லீ, ஷான் டைட், மிட்செல் ஜான்சன் போன்ற வேகமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் அதில் மிகவும் வேகமான பந்துவீச்சாளர் என்றால் அது சோயிப் அக்தர் தான்” என்று தெரிவித்துள்ளார்.