விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய பிரெட் லீ!
விராட் கோலி ஃபார்மல் இல்லாமல் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர் விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்றும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணமாக பலர் கூறுவது விராட் கோலி கடைசியாக சதம் விளாசி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது என்பதுதான். அண்மைக்காலமாக விராட் கோலி ரன் அடிக்க தொடங்கினாலும் , சில தவறுகளை தொடர்ந்து செய்து ஆட்டம் இழந்து வருகிறார். குறிப்பாக ஆப் சைடில் செல்லும் பந்தை அடிக்க முயன்று, விக்கெட் கீப்பரிடம் ஆட்டம் இழந்து வருகிறார்.
இந்த முறையை விராட் கோலி மாற்றினாலே ரன்சேர்த்து விடலாம். விராட் கோலிக்கு எதிராக கருத்துகள் வந்தாலும் ரோஹித் சர்மா விராட் கோலிக்கு ஆதரவாக தான் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ விராட் கோலிக்கு ஊக்கமளிக்கும் விதமாக கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில். “விராட் கோலிக்கு 33 வயது தான் ஆகிறது. அதற்குள் விராட் கோலி 70 சதங்களை விளாசி இருக்கிறார். விராட் கோலி இன்னும் நான்கு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார்.
நாம் இன்னும் விராட் கோலியின் சிறந்த ஆட்டத்தை காணவில்லை. விராட் கோலி வரும் காலங்களில் முன்பை விட சிறப்பாக விளையாடி ரன் குவிப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரட் லீ சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில் சச்சினை எடுத்துக் கொண்டாலே அவர் கடைசியாக விளையாடிய இரண்டு ஆண்டில் தான் அதிக சதங்களை விளாசினார். குறிப்பாக 11 போட்டிகளில் 9 சதங்களை சச்சின் டெண்டுல்கர் குவித்தார். சச்சின் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங்கில் இது போன்ற குறைகள் ஏற்படுவது சகஜம்தான்.
இதிலிருந்து மீண்டு வந்து அவர்கள் முன்பை விட அதிக ரன்கள் குவிக்க அனைத்து சாத்தியங்களும் உள்ளது. பிரட்லீன் இந்த பேச்சு விராட் கோலி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி தந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது பழைய ஃபார்மை மீட்பாரா என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.