IND vs SA: இந்திய டி20 அணியில் முகமது ஷமி சேர்ப்பு!
ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் அனைத்து அணிகளும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகின்றன. அந்தவகையில் இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் மோதவுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முழு பலத்தில் களமிறக்கவுள்ள இந்தியா அணி, தென் ஆப்பிரிக்க தொடரில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது. ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் என ஆசிய கோப்பையில் இருந்தே அதே ஃபார்முலா தான். 3ஆவது ஓப்பனருக்கே செல்லவில்லை.
மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். ஆனால் ஃபினிஷர் பணிகளுக்காக இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. இதனால் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் விளையாடுகின்றனர். வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹார் என பலமான வீரர்கள் களமிறங்குகின்றனர். ஆனால் இதில் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கான கடைசி போட்டி தென்னாப்பிரிக்க தொடர் தான். இதில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒதுக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது. அவர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால், உடற்தகுதியை பரிசோதிக்க வேண்டும் என விளக்கம் அளித்துள்ளது.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் , முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.