ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் - ரிக்கி பாண்டிங்!

Updated: Tue, Aug 20 2024 22:29 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துடன், இரண்டாவது முறையாக கோப்பையும் வென்றும் அசத்தியது. மேலும் இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு இருந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் 4 என்ற எகனாமியில் பந்து வீசி எதிரணி பேட்டர்களில் ஒவ்வொரு முறையும் நிலை குழைய செய்தார்.

இதனையடுத்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு உலகெங்கலும் இருந்து வழ்த்துகள் குவிந்தது. அதன்பின் தற்போது ஓய்வில் இருக்கும் அவர் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் இணைவார் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் என்று தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார். மேலும் அவரது காயம் காரணமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வியும் இருந்தது. ஆனால் அவர் உண்மையில் நன்றாக திரும்பி வந்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். சமீபத்தில் நடந்த முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்துள்ளோம். அவரிடம் இன்னும் அதே வேகம் உள்ளது. அத்துடன் அவர் துல்லியமாக பந்துவீசுவது மட்டுமின்றி, அவரால் என்ன செய்ய முடியும் என்பதனையும் காட்டியுள்ளார்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

திறமை எல்லாம் ஒன்றுதான். அவர் ஆண்டுக்கு ஆண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே என்னைப் பொறுத்தவரை அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகசிறந்த பந்துவீச்சாளராக நான் பார்க்கிறேன். அதுமட்டுமின்றி அவரை பற்றி எதிரணி பேட்ஸ்மேன்களிடம் பேசும்போது, ​​அவர் எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறார் என்பது தெரியவந்தது. ஏனெனில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது ஒரு கனவு போன்றது. அவரது பந்துவீச்சை கணிக்கவே முடியாது. ஒரு பந்து இன் ஸ்விங் என்றால், அடுத்த பந்து அவுட் ஸ்விங்கை வீசுவார். மேலும் அவரிடம் நிலைத்தன்மையும் உள்ளது” என்று பாராட்டியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை