அணி வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Sun, May 18 2025 21:39 IST
Image Source: Google

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது. 

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 17 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இப்போட்டி முடிந்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “நேற்று பயிற்சி செய்யும் போது எனக்கு அடிபட்டது, நான் சென்று இங்கே என்ன பிரச்சினை என்று பார்க்க வேண்டும். நான் எல்லா வீரர்களுக்கும் ஒரு நேர்மறையான உடல் மொழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியை அனுப்பினேன், நீங்கள் தடுமாறி ஆட்டம் உங்களிடமிருந்து விலகிவிட்டதாக உணருவீர்கள், ஆனால் இந்த வகையான சிறந்த மற்றும் துணிச்சலான அணுகுமுறையைக் காட்டும் ஒவ்வொரு வீரரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

ஹர்ப்ரீத் பிரார் வலைகளில் சீராக விளையாடுகிறார். அவர் தனக்காக சிறந்ததைச் செய்ய விரும்புகிறார், இந்த வாய்ப்புக்காக அவர் ஏங்கிக்கொண்டிருந்தார், இன்று அவர் களமிறங்கி தனது சிறந்ததைச் செய்ததாக உணர்கிறேன், அவருக்கு வாழ்த்துக்கள், அவரது மனநிலை முழுவதும் மிகப்பெரியது. இடைவேளைக்கு பிறகு எங்கள் அணி வீரர்கள் காட்டிய முற்றிலும் அற்புதமான அணுகுமுறை இது. மேலும் ஒட்டுமொத்த அணி வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இத்தொடரை எதிர்கொண்டுள்ளோம்” என்று கூறிவுள்ளார். 

இப்போட்டி குறித்து பேசினால், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நெஹால் வதேரா அதிரடியாக விளையாடி 70 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ஷஷாங்க் சிங் 59 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களையும் வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை