ஐபிஎல் 2022: விதிகளை மீறியதாக பும்ரா, ராணா மீது குற்றச்சாட்டு!

Updated: Thu, Apr 07 2022 13:57 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 14ஆவது ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 

இதில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, நடப்புத் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இப்போட்டியில் மும்பை வீரர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா ஆகிய இருவரும் நடத்தை விதிகளை மீறியதாக கள நடுவர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் ஐபிஎல் நிர்வாகம் நடத்திய விசாரணையில், பும்ரா மற்றும் நிதிஷ் ராணா இருவரும் தங்களது தவறினை ஒப்புக்கொண்டனர். 

இதையடுத்து, நிதிஷ் ராணாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஐபிஎல் நிர்வாகக்குழு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பும்ரா மற்றும் நிதிஷ் ராணா என்ன தவறு செய்தனர் என்ற விவரத்தை ஐபிஎல் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ஐபிஎல் நடத்தை விதிமுறைகளில் லெவல்-1 தவறை செய்ததால் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை